Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தஞ்சோங் பகாரில் நடந்த கைகலப்பின் தொடர்பில் இருவர் கைது

தஞ்சோங் பகாரில் ஒரு காருக்கும், தனிநபர் நடமாட்டச் சாதனத்துக்கும் இடையில் நிகழ்ந்த விபத்தால் ஏற்பட்ட கைகலப்பில் இரு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
தஞ்சோங் பகாரில் நடந்த கைகலப்பின் தொடர்பில் இருவர் கைது

(படம்: SG Road Vigilante/Facebook)

தஞ்சோங் பகாரில் ஒரு காருக்கும், தனிநபர் நடமாட்டச் சாதனத்துக்கும் இடையில் நிகழ்ந்த விபத்தால் ஏற்பட்ட கைகலப்பில் இரு ஆடவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை நடந்த சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து புகார் ஒன்று கிடைத்ததாக இன்று ( டிசம்பர் 1) காவல்துறை வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

எங்கோர் ஸ்ட்ரீட்டில் மூண்ட கைகலப்பில் 43 வயது கார் ஓட்டுநரும் 36 வயது தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் காவல்துறை கூறியது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆளுக்கு அதிகபட்சமாக ஆறு மாதச் சிறைத்தண்டனையுடன் 2,500 வெள்ளி அபராதமும் விதிக்கப்படலாம்.

SG Road Vigilante பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி ஒன்றில் தனிநபர் நடமாட்டச் சாதனம் சாலையில் செல்வது தெரிகிறது.

தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநர், காரின் கதவைத் திறந்து கார் ஓட்டுநரைச் சட்டையால் இழுப்பதும் தெரிகிறது.

பொதுமக்கள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றுமாறு காவல்துறை ஆலோசனை விடுத்துள்ளது.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவர்கள் காவல்துறையிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்