Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதலைத் தோலை அதிகம் இறக்குமதி செய்யும் ஆசிய நாடு சிங்கப்பூர்

ஆப்பிரிக்காவிலிருந்து, பாம்பு, முதலை, உடும்பு உள்ளிட்ட ஊர்வனவற்றின் தோலை அதிகம் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது.

வாசிப்புநேரம் -
முதலைத் தோலை அதிகம் இறக்குமதி செய்யும் ஆசிய நாடு சிங்கப்பூர்

(படம்: Reuters)


ஆப்பிரிக்காவிலிருந்து, பாம்பு, முதலை, உடும்பு உள்ளிட்ட ஊர்வனவற்றின் தோலை அதிகம் இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தில் உள்ளது.

வனவிலங்கு வர்த்தகத்தைக் கண்காணித்து வரும் Traffic நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் முதலைத் தோல் பதனிடப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அவை அங்குள்ள ஆடை அலங்கார நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.

முதலைத் தோல் பதனீட்டுத் துறையில் சிங்கப்பூர் சிறந்து விளங்குவதால் தென் கொரியா, சீனா ஆகிய நாடுகளைக் காட்டிலும் அது முன்னணியில் உள்ளது.

கடந்த 2006லிருந்து 2015 வரை ஆப்பிரிக்காவிலிருந்து 1.6 மில்லியன் தோல்கள் ஆசியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.

அவற்றில் 60 விழுக்காட்டுத் தோல்கள் சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்பட்டன.

நைல் நதியில் வாழும் முதலைகளின் தோலையே சிங்கப்பூர் அதிகம் இறக்குமதி செய்கிறது.

சட்ட ரீதியான அங்கீகாரத்துடன் அவை ஸிம்பாப்வே, ஸாம்பியா, தான்ஸானியா போன்ற நாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வருகின்றன.

வனப் பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் முதலை முட்டைகள், பாதுகாக்கப்பட்ட பண்ணைகளில் அடை காக்கப்பட்டு குஞ்சுகள் பொரிந்ததும் அங்கு அவை உரிய பருவம் வரை வளர்க்கப்படுகின்றன.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்