Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நிறுவனங்களுக்கும் சுயதொழில் செய்வோரும் வரிச் சந்தா செலுத்த மூன்று மாதம் கூடுதல் அவகாசம்

நிறுவனங்களுக்கும் சுயதொழில் செய்வோரும் வருமான வரிச் சந்தா செலுத்த 3 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
நிறுவனங்களுக்கும் சுயதொழில் செய்வோரும் வரிச் சந்தா செலுத்த மூன்று மாதம் கூடுதல் அவகாசம்

(படம்: AFP/Roslan Rahman)

நிறுவனங்களுக்கும் சுயதொழில் செய்வோரும் வருமான வரிச் சந்தா செலுத்த 3 மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் தெரிவித்துள்ளார்.

COVID-19 கிருமித்தொற்றால் மெதுவடைந்துள்ள பொருளியலை ஊக்குவிக்க 48 பில்லியன் வெள்ளி மதிப்பு கொண்ட மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான வருமான வரிச் சந்தாவைச் செலுத்தாமல், ஜூலையிலிருந்து அதைத் தொடரலாம்.

அதனால் சேமிக்கப்படும் ரொக்கத்தை அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம் என்றார் திரு. ஹெங்.

சுயதொழில் செய்வோர் மே, ஜூன், ஜூலை மாதங்களில் வருமான வரிச் சந்தா செலுத்தத் தேவையில்லை.

வரி செலுத்துவதில் உதவி தேவைப்படுவோர் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்தை நாடலாம் என்றார் திரு. ஹெங்.

கிருமிப்பரவலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகக் கட்டட உரிமையாளர்கள் ஓராண்டுக்குச் சொத்து வரி செலுத்தத் தேவையில்லை.

ஹோட்டல்கள், உணவகங்கள், கடைகள், சுற்றுலாத் தலங்கள் போன்றவை அவற்றில் அடங்கும்.

உணவங்காடி நிலையங்களில் கடை நடத்துவோருக்கு மூன்று மாத வாடகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்