Images
  • scam emial
    (படம்: Inland Revenue Authority of Singapore)

கிருமித்தொற்றுத் தொடர்பில் வரிச்சலுகை? - மின்னஞ்சல் 'மோசடி' குறித்து சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரிக்கை

கிருமித்தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படுவதாய் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல் குறித்து சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் எச்சரித்துள்ளது.

வரி செலுத்துவோர், நிறுவனங்கள், வரி விலக்கு பெற்றுள்ள அமைப்புகள் ஆகியவற்றுக்கு, ஆணையம் சலுகை அளிப்பதைப் போன்று மின்னஞ்சலில் குறிப்பிட்டது.

அதைப் பெறுவதற்கு, மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட ஓர் ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து, அதில் சில விவரங்களைக் குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்த மின்னஞ்சலைப் பொதுமக்கள் பொருட்படுத்த வேண்டாம் என்றும், அதற்குப் பதில் சொல்லத் தேவையில்லை என்றும் ஆணையம் கூறியுள்ளது.

மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பியவர்கள், தங்கள் தனிப்பட்ட, நிதி விவரங்களைக் கூறியிருந்தால், காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு ஆணையம் அறிவுறுத்தியது.  

Top