Images
  • Budget 2020 Taxi Private Hire
    (படம்: CNA)

டாக்சி , தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள் செப்டம்பர் மாதம் வரை விநியோக நடவடிக்கைகளில் தொடரலாம்

டாக்சி , தனியார் வாடகைக் கார் ஆகியவற்றின் ஓட்டுநர்கள், செப்டம்பர் மாத இறுதி வரை, உணவு, மளிகைப் பொருள்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் சேவையைத் தொடரலாம்.

அது தொடர்பான தற்காலிக நடைமுறையை அதிகாரிகள் நீட்டித்துள்ளனர்.

ஓட்டுநர்களின் வருவாய்க்கு அது வகைசெய்யும் என்று போக்குவரத்து அமைச்சர் காவ் பூன் வான் கூறினார்.

அதேநேரத்தில் அதிகரித்துள்ள அத்தகைய விநியோகத்திற்கான தேவையை ஈடுகட்டவும் அது உதவும்.

புதிய விதிமுறையின் கீழ், 10ஆயிரத்துக்கும் அதிகமான டாக்சி மற்றும் தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யும் சேவையில் இணைந்துள்ளனர்.

அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணிப்பர் என்று அமைச்சர் காவ் கூறினார்.

டாக்சி, தனியார் வாடகைக் கார் ஆகியவற்றின் வழக்கமான சேவையை நாடும் பயணிகளுக்குப் பாதிப்பு நேராமலிருப்பதை அவர்கள் உறுதிசெய்வர் என்றார் அவர்.  

Top