Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மூத்த டாக்சி ஓட்டுநர்கள் இனி ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால் போதும்

மூத்த டாக்சி ஓட்டுநர்கள் இனி ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால் போதும்

வாசிப்புநேரம் -
மூத்த டாக்சி ஓட்டுநர்கள் இனி ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால் போதும்

கோப்புப்படம்

சிங்கப்பூரில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய டாக்சி ஓட்டுநர்கள் வாகனமோட்டுவதற்கு ஏற்ற உடல்நலனைச் சோதிக்க இனி
ஒருமுறை மட்டும் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால் போதும்.

தற்போது அது இரண்டாக உள்ளது.

இந்த ஆண்டிற்குள் மாற்றம் நடப்புக்கு வரும் என்று போக்குவரத்துக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தற்போது, 65 வயதைக் கடந்த தனியார் வாகன ஓட்டுநர்கள் Class Three உரிமத்தைத் தக்கவைத்துக்கொள்ள மூவாண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனையில் தேர்ச்சி பெறவேண்டும்.

அவர்கள் டாக்சி ஓட்டுவதற்கான தொழில்முறை உரிமம் பெற விரும்பினால் மற்றொரு மருத்துவப் பரிசோதனையிலும் தேர்ச்சி பெறவேண்டும்.

இதற்கிடையே,
ஓட்டுநர்களுக்கான வாடகைக் கட்டணத்தைக் குறைப்பது பற்றி டாக்சி நிறுவனங்களுடன் போக்குவரத்து அமைச்சு இணைந்து பணியாற்றும் என்றும் டாக்டர் ஜனில் கூறினார்.

COVID-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவுவது நோக்கம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்