Images
  • taxis
    (Photo: AFP/ROSLAN RAHMAN)

COVID -19 கிருமிப் பரவல்-டாக்சி, தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்களுக்கு உதவ $77 மில்லியன் திட்டம்

COVID-19 கிருமிப் பரவலால் ஏற்பட்ட பாதிப்பைச் சமாளிக்க டாக்சி, தனியார் வாடகைக் கார் நிறுவனங்களுக்கு 77 மில்லியன் வெள்ளி மதிக்கத்தக்க உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிலப் போக்குவரத்து ஆணையமும் போக்குவரத்து அமைச்சும் அது குறித்து இன்று அறிவித்தன.

COVID-19 நோய்த் தொற்று காரணமாக வருவாய் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்களுக்கு உதவுவது திட்டத்தின் நோக்கம்.

உதவித்திட்டத்துக்கு அரசாங்கம் 45 மில்லியன் வெள்ளி வழங்கும். எஞ்சிய தொகையை டாக்சி, தனியார் வாடகைக் கார் நிறுவனங்கள் கொடுக்கும்.

மூன்று மாதங்களுக்கு சுமார் 40,000 ஓட்டுநர்கள் நாளொன்றுக்கு 20 வெள்ளி வரை பெற்றுக்கொள்ளலாம்.

தகுதி பெறும் டாக்சி ஓட்டுநர்கள் தத்தம் நிறுவனங்கள் வழி அந்தச் சிறப்பு சலுகையை நாளை முதல் பெறுவர்.

தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்கள் நிதியுதவியைப் பெற தங்கள் நிறுவனங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.   

Top