Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாரம்பரியச் சீன மருத்துவத்தால் நோயாளியின் காலைத் துண்டிக்க வேண்டிய நிலை

பாரம்பரியச் சீன மருத்துவர் ஒருவர் அளித்த பல்வேறு சிகிச்சைகளால் நோயாளி ஒருவரின் காலைத் தூண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

வாசிப்புநேரம் -
பாரம்பரியச் சீன மருத்துவத்தால் நோயாளியின் காலைத் துண்டிக்க வேண்டிய நிலை

( படம்: AFP )

பாரம்பரியச் சீன மருத்துவர் ஒருவர் அளித்த பல்வேறு சிகிச்சைகளால் நோயாளி ஒருவரின் காலைத் தூண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட நோயாளி அது குறித்துப் புகார் செய்ததைத் தொடர்ந்து, பாரம்பரியச் சீன மருத்துவர் லீ மிங் சோங்கின் (Lee Miing Chong) உரிமம் மூவாண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

லீக்கு 5,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

தோ பாயோவில் உள்ள Royal Acupuncture Specialist Centre பாரம்பரியச் சீன மருந்தகத்தில் அவர் பணியாற்றி வந்தார்.

2015-ஆம் ஆண்டு, லீ வழங்கிய தவறான சிகிச்சையால், நீரிழிவு நோயுள்ள ஆடவரின் இரு கால்களிலும் உணர்வு குறையத் தொடங்கியது.

பிறகு, மருத்துவமனையில் அந்த நோயாளியின் இடது கால், முழங்காலுக்குக் கீழ் அகற்றப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்