Images
  • swissotel

தொழில்நுட்பத்தோடு உற்பத்தித் திறனை மேம்படுத்தும் சேவைத் துறை

உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்று என, வர்த்தக, தொழில்துறைக்கான மூத்த துணை அமைச்சர் திரு சீ ஹொங் டாட் சுற்றுப்பயணத் துறை மாநாட்டில் குறிப்பிட்டார்.

மனிதர்கள் வழங்கும் சேவைக்குத் தொழில்நுட்பம், எல்லா நேரத்திலும் ஈடுகொடுக்க முடியாது.

அதே வேளையில், தானியக்கமயமும் மின்னிலக்கமயமும் மேம்பட்ட வேலைகளை உருவாக்க உதவுகின்றன என்பதைத் திரு. சீ சுட்டிக் காட்டினார்.

Swissotel The Stamford ஹோட்டலை ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டிய அவர், அங்கு நடப்பிலுள்ள விருந்தினருக்கான தானியக்கப் பதிவு முறை, ஹோட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்களோடு அதிக நேரம் செலவிட உதவுகிறது.

இதனால் ஊழியர்கள் மேம்பட்ட வேலைப் பொறுப்புகளில் ஈடுபட்டுச் சம்பளத்தை உயர்த்திக்கொள்ளலாம்.

மேலும் வேலை குறித்த மனநிறைவும் ஊழியர்களுக்கு அதிகரிப்பதாக, திரு. சீ கூறினார். 

Top