Images
சட்டவிரோதக் கும்பல்களில் செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் 6 பதின்ம வயதினர் கைது
சிங்கப்பூரில் சட்டவிரோதக் கும்பல்களில் செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் 6 பதின்ம வயது ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 17-க்கும் 19- க்கும் இடைப்பட்ட வயதுடையவர்கள்.
கடந்த 9-ஆம் தேதி ஜாலான் லோயாங் புசார் பகுதியில் ஒரு குழு, கும்பல்கள் தொடர்பான அடையாளங்களைக் காட்டி, கும்பல் முழக்கங்களைச் சொல்லிக் கத்துவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அந்த இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நால்வரைக் கைது செய்தனர்.
அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் இருவர் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
விசாரணை தொடர்கிறது.
சட்டவிரோதக் கும்பலின் உறுப்பினர் என்று நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 5,000 வெள்ளி அபராதமோ மூவாண்டு வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.