Images
  • tekka-1
    படம்: நித்திஷ் செந்தூர்

தேக்கா நிலையம் - தெரிந்தது..தெரியாதது...

நம்மில் பலர் உணவு, துணிமணி, வீட்டிற்குத் தேவையான பொருள்கள் ஆகியவற்றை வாங்க தேக்கா சென்றிருப்போம். ஆனால் அதன் வரலாற்றை நாம் அறிந்திருப்போமா? கண்டாங் கெர்பாவ் சந்தை என்பது அதன் பழைய பெயர்.  'தேக்கா பிளேஸ்' கட்டடம் அமையவிருக்கும் இடத்தில் கண்டாங் கெர்பாவ் சந்தை முன்னர் இருந்தது.


கண்டாங் கெர்பாவ் சந்தை 1915ஆம் ஆண்டு நகர மன்ற ஆணையத்தால் கட்டப்பட்டது. சுமார் 108,000 வெள்ளி செலவில் அது நிறுவப்பட்டது. உயர்தரமான இறைச்சிக்குச் சந்தை பெயர்பெற்றிருந்தது. சந்தையின் அருகிலிருந்த மாட்டுத் தொழுவங்கள் அதற்கு முக்கிய காரணம்.


1950களில் சந்தையில் கூட்ட நெரிசல் பிரச்சினை தலைதூக்கியது. மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளவேண்டிய நெருக்கடி உண்டானது.


1982ஆம் ஆண்டில், சந்தை தரைமட்டமாக்கப்பட்டு தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டது. ஸுச்சியாவ் (Zhujiao) நிலையம் என்று பெயர் மாற்றம் கண்டது. அங்கு ஈரச்சந்தை, உணவங்காடி நிலையம், கடைகள் ஆகியவை அமைந்திருந்தன. இருப்பினும் Zhujiao என்ற சொல்லைப் படிக்கவும்  உச்சரிக்கவும் பலரும் சிரமப்பட்டனர்.

2000ஆம் ஆண்டில் மீண்டும் அது தேக்கா நிலையம் என்ற பெயரைப் பெற்றது.

 

மூலம்: தேசிய மரபுடைமைக் கழகம்


Top