Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியாவுக்குப் பொலிவூட்டவிருக்கும் நவீன 'தேக்கா பிளேஸ்'

முன்பு The Verge கடைத்தொகுதி இருந்த இடத்தில் அந்த புதிய ஒருங்கிணைந்த வளாகம் அமையவுள்ளது.

வாசிப்புநேரம் -

லிட்டில் இந்தியாவில் குடியிருப்பு, வர்த்தக இடங்களோடு புதிதாகக் கட்டப்படவுள்ளது, "தேக்கா பிளேஸ்".

முன்பு The Verge கடைத்தொகுதி இருந்த இடத்தில் அந்த புதிய ஒருங்கிணைந்த வளாகம் அமையவுள்ளது.

Lum Chang கட்டுமான நிறுவனமும் LaSalle Investment Management நிறுவனமும் இணைந்து அந்த வளாகத்தை அமைக்கின்றன.

லிட்டில் இந்தியாவுக்கு மேலும் அழகு சேர்க்கவிருக்கும் புதிய மேம்பாட்டுத் திட்டம் குறித்த சில குறிப்புகள்!

மரபுடைமையும் நவீனமும் கலந்த வடிவமாய் புதிய கட்டடம் இருக்கும் என்று அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலை, மரபுடைமைக்கு அடையாளமாக விளங்கும் வட்டாரங்களில் ஒன்று லிட்டில் இந்தியா. அதில் புதுமையின் அடையாளமாக விளங்கவிருக்கிறது "தேக்கா பிளேஸ்".

Ascott Ltd நிறுவனம் நிர்வகிக்கும் குடியிருப்புகள், உணவுக் கடைகள், ஆடை அலங்காரக் கடைகள் என்று அனைத்தும் உள்ள இடமாய் விளங்கவுள்ளது "தேக்கா பிளேஸ்"

10 மாடிக் கட்டடம் ஒன்றும் 7 மாடிக் கட்டடம் ஒன்றும் அங்கு அமையவுள்ளன.

320 குடியிருப்புகள், கூரைப்பகுதியில் பல உணவு, பானக் கடைகளோடு மேலும் 80 கடைகள் அங்கிருக்கும்.

சிங்கப்பூர்ப் பயணக் கழகத்தோடும் உள்ளூர் அமைப்புகளோடும் இணைந்து தேக்கா பிளேஸ் அந்த வசதிகளை வழங்கவுள்ளது.

கலாசார நிகழ்ச்சிகளுக்கும் நடவடிக்கைகளுக்கும் அங்கு இடம் ஒதுக்கப்படும்.

தேக்கா பிளேஸ் குறித்து மேல்விவரம் பெற :
http://tekkaplace.sg/
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்