Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Telegram வழி ஆபாசப் படங்கள், காணொளிகள் பகிர்ந்தாக 4 பேர் கைது

Telegram செயலியின் மூலம் ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர், கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாசிப்புநேரம் -
Telegram வழி ஆபாசப் படங்கள், காணொளிகள் பகிர்ந்தாக 4 பேர் கைது

(படம்: REUTERS/Dado Ruvic/Files)


Telegram செயலியின் மூலம் ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர், கைது செய்யப்பட்டுள்ளனர்.

Sam's Lots Of CB Collection எனும் பெயர் கொண்ட உரையாடல் குழுவில் அத்தகைய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் 29லிருந்து 45 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், உரையாடல் குழுவை அவர்கள் நிர்வகித்து வந்தார்கள் என்றும், சிங்கப்பூர்க் காவல் படையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

கைதான நான்காவது ஆடவருக்கு 26 வயது என்றும், ஆபாசப் படங்களையும் காணொளிகளையும் விற்பதற்காக விளம்பரங்கள் செய்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கைதான ஆடவர்களிடமிருந்து மடிக் கணினிகள், கைபேசிகள் என 15க்கும் மேற்பட்ட மின்சாதனப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணை தொடர்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதம் வரையிலான சிறைத் தண்டனையோ, அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்