Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காணொளி வழி என்னென்ன மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்?

COVID-19 சூழலில், நோயாளிகள் பலதுறை மருந்தகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகக் காணொளி வாயிலான மருத்துவச் சேவைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
காணொளி வழி என்னென்ன மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்?

கோப்புப் படம்: AFP/Joe Raedle

COVID-19 சூழலில், நோயாளிகள் பலதுறை மருந்தகங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதற்காகக் காணொளி வாயிலான மருத்துவச் சேவைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கிருமிப்பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டத்தின் ஆரம்பத்திலிருந்து சுமார் 12,000 நோயாளிகள் அந்தச் சேவைகளைப் பெற்றுள்ளதாக தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் தெரிவித்தது. 

காணொளி வழி என்னென்ன மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன?

1. தாதிமை இல்லங்களின் நோயாளிகளுக்குக் காணொளி வழி மருத்துவ ஆலோசனை

Sunlove Home தாதிமை இல்லத்தில் வசிக்கும் மூத்தோர் ஹவ்காங் பலதுறை மருந்தகத்தின் மருத்துவர்களிடம் காணொளி மூலம் ஆலோசனை பெறுகின்றனர்.

மற்ற தாதிமை இல்லங்களுக்கும் இதனை விரிவுபடுத்த தேசியச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் பல்வேறு திட்டங்களை ஆராய்ந்து வருகிறது.

2. உணவு நிபுணர்களுடன் ஆலோசனை

நாட்பட்ட நோயுடையவர்கள், குழந்தைகள் போன்றோரின் ஊட்டச்சத்துத் தேவைகள் பற்றிய விவரங்களைச் சத்துணவு நிபுணரிடமிருந்து காணொளி மூலமாகவோ தொலைபேசி மூலமாகவோ பெறலாம்.

3. மனநலத்துக்கான ஆலோசனை

மனநலம் பாதிக்கப்பட்டோர் தொலைபேசியின்மூலம் ஆலோசனை பெறலாம்.

மனோவியல் நிபுணர்கள் ஏற்ற ஆலோசனைகளை வழங்குவர்.

கவலை, பதற்றம், தூக்கமின்மை, மனவுளைச்சல் சார்ந்த இதர பிரச்சினைகளை எவ்வாறு சமாளிக்கலாம் என்பது குறித்தும் நோயாளிகள் ஆலோசனை பெறலாம்.

4. மருத்துவ சமூக ஊழியருடன் கலந்தாலோசனை

மருத்துவ சமூக ஊழியரின் ஆலோசனையைத் தொலைபேசி வழி பெறலாம். சமூகத்தில் எளிதாகப் பாதிக்கப்படுவோரும் உதவி தேவைப்படும் நோயாளிகளும் இதன் மூலம் உரிய நேரத்தில் சமூக, நிதி ஆதரவைப் பெறமுடியும்.

5. பயிற்சி வழி சிகிச்சை ஆலோசனை

ஜூன் 2ஆம் தேதி முதல், உடற்பயிற்சி மூலம் சிகிச்சை பெற விரும்பும் நோயாளிகள் காணொளி மூலம் ஆலோசனை பெறலாம். வலியைக் குறைக்கவும் அன்றாட நடவடிக்கைகளைத் துடிப்பாகச் செய்யவும் இது உதவும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்