Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாரயிறுதியில் கூடுதல் பக்தர்களை வரவேற்கத் தயாராகும் இந்துக் கோயில்கள்

சிங்கப்பூரில் நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவருகின்றன. 

வாசிப்புநேரம் -
வாரயிறுதியில் கூடுதல் பக்தர்களை வரவேற்கத் தயாராகும் இந்துக் கோயில்கள்

(படம்: சுதேஷ்னி தனராஜ்)

சிங்கப்பூரில் நோய்ப்பரவல் கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சில வழிபாட்டுத் தலங்களில் இன்று முதல் 100 பேர்  வரை அனுமதிக்கப்படுகின்றனர்.

அவற்றுள் இந்து ஆலயங்களான ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் ஆகியவை அடங்கும்.

கோயில்கள் கூடுதல் பக்தர்களைப் பாதுகாப்புடன் வரவேற்க நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

அந்த முயற்சிகளைச் 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டன ஆலய நிர்வாகக் குழுக்கள்...

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயம்

- உள்ளுக்குள் இடவசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நடந்து செல்ல நடைபாதைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

(படம்: Sutheshni)

(படம்: சுதேஷ்னி தனராஜ்)

- அதிகளவில் பக்தர்கள் சேரும்போது அவர்களுக்கு வழிகாட்டவும் பாதுகாப்பு இடைவெளிகளை உறுதிசெய்யவும் கூடுதல் நபர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

(படம்: Sutheshni)

(படம்: சுதேஷ்னி தனராஜ்)


ஸ்ரீ மாரியம்மன் கோவில்

- மக்கள் கூட்டத்தை நிர்வகிக்கக் கூடுதல் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

- பக்தர்கள் கோயிலில் அதிக நேரம் செலவிடாமல் இருக்க பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர்.

-அதற்காகத் தொண்டூழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

கோயில்களின் ஏற்பாட்டு நடவடிக்கைகள், அவை சந்திக்கும் சவால்கள் இவற்றைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம், இன்றிரவு 8.30 மணிச் செய்தியில். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்