Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிப்புற நிகழ்ச்சிகள், திருமணங்கள், சமய நிகழ்ச்சிகள், திரையரங்குகள், - கட்டுப்பாடுகளின் விவரங்கள்

 வெளிப்புற நிகழ்ச்சிகள், திருமணங்கள், சமய நிகழ்ச்சிகள், திரையரங்குகள், - கட்டுப்பாடுகளின் விவரங்கள் 

வாசிப்புநேரம் -
வெளிப்புற நிகழ்ச்சிகள், திருமணங்கள், சமய நிகழ்ச்சிகள், திரையரங்குகள், - கட்டுப்பாடுகளின் விவரங்கள்

கோப்புப் படம்: நித்திஷ் செந்தூர்

சிங்கப்பூரில் COVID-19 சம்பவங்கள் அதிகரிப்பதால் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

இருப்பினும் வழிபாட்டு இடங்கள், வெளிப்புற நிகழ்ச்சிகள், நேரடி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படவில்லை.

தற்போது நடப்பில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படவேண்டும் என்று அமைச்சுகளுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்தது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 1,000 பேர் வரை அந்த இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.

50 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டால் Pre-Event Testing (PET) எனும் COVID-19 முன் பரிசோதனை கட்டாயம்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 12 மற்றும் அதற்குக் குறைவான வயதுடையவர்களும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளலாம்.

திருமணச் சடங்குகளில் குழுவாக இரண்டு பேருக்கு மேல் கூடக்கூடாது. அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும்.

வீட்டு நிகழ்ச்சிகளில் 10 பேர் வரை கலந்துகொள்ளலாம்.

50 பேர் வரை கலந்துகொண்டால் Pre-Event Testing (PET) எனும் COVID-19 முன் பரிசோதனை கட்டாயம்.

திருமண விருந்து உபசரிப்பில் 250 பேர் வரை கலந்துகொள்ள அனுமதியுண்டு. அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும்.

ஒரு மேசைக்கு 5 பேருக்குமேல் ஒன்றுகூடக்கூடாது.

திருமண நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றும்படிப் பணிக்குழு கேட்டுக்கொண்டது.

மூத்தோரும் நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களும் நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பது சிறந்தது என்று அது கூறியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்