Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பிரபல Tencent நிறுவனத்தின் அலுவலகம் ...தென்கிழக்காசிய வட்டாரத்தின் தலைமையகமாகவும் செயல்படும்

சிங்கப்பூரில் பிரபல Tencent நிறுவனத்தின் அலுவலகம் ...தென்கிழக்காசிய வட்டாரத்தின் தலைமையகமாகவும் செயல்படும்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் புதிதாய்த் திறக்கப்படவுள்ள சீனாவின் பிரபல Tencent நிறுவனத்தின் அலுவலகம், தென்கிழக்காசிய வட்டாரத்தின் தலைமையகமாகச் செயல்படவுள்ளது.

சீனாவின் இணைய விளையாட்டு, சமூக ஊடக நிறுவனமான Tencent, மலேசியா, இந்தோனேசியா, தாய்லந்து முதலிய நாடுகளில் ஏற்கனவே அலுவலகங்களை அமைத்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் Tencent நிறுவனத்தின் செயலிகளைத் தடைசெய்துள்ள நிலையில், திட்டமிட்டப்படி விரிவாக்க நடவடிக்கைகளை நிறுவனம் தொடர்கிறது.

Tencent நிறுவனத்தின் முக்கியச் சந்தையாக தென்கிழக்காசியா விளங்குகிறது.

'Arena of Valor' போன்ற அதன் சில இணைய விளையாட்டுகள் இந்த வட்டாரத்தில் பிரபலம் அடைந்துள்ளன.

Tencent Cloud எனும் நிறுவனத்தின் மேகக்கணிமைச் சேவைக்கும் தென்கிழக்காசிய நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்