Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மறைந்த இந்தோனேசிய முன்னாள் அதிபர் ஹபீபிக்கு அஞ்சலி செலுத்திய மூத்த அமைச்சர் தியோ

இந்தோனேசியாவின் மறைந்த முன்னாள் அதிபர் BJ ஹபீபிக்கு மூத்த அமைச்சர் தியோ சீ ஹியேன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -
மறைந்த இந்தோனேசிய முன்னாள் அதிபர் ஹபீபிக்கு அஞ்சலி செலுத்திய மூத்த அமைச்சர் தியோ

(படம்: Ministry of Communications and Information)

இந்தோனேசியாவின் மறைந்த முன்னாள் அதிபர் BJ ஹபீபிக்கு மூத்த அமைச்சர் தியோ சீ ஹியேன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வேலை தொடர்பாக ஜக்கர்த்தா சென்றிருந்த திரு தியோ அங்கு தரையிறங்கியதும் திரு. ஹபீபிக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினார்.

திரு. ஹபீபி கடினமான சூழ்நிலையில் இந்தோனேசியாவை வழிநடத்தியதாகக் திரு. தியோ தமது Facebook பதிவில் குறிப்பிட்டார்.

1998இல் அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட படமும் பதிவில் இடம்பெற்றது.

பொதுச் சேவை, விமானப் பொறியியல் போன்றவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தவர், மறைந்த திரு ஹபிபீ.

தமது நாட்டின் மீது கொண்டிருந்த பற்றால், திரு ஹபிபீ தொடர்ந்து மக்களின் மனத்தில் நிலைத்திருப்பார் என்று கூறினார், மூத்த அமைச்சர் தியோ.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்