Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மக்களுக்கு ஆதரவு வழங்க புதிய கட்டமைப்பு

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மக்களுக்கு ஆதரவு வழங்க பல்வேறு அரசாங்க அமைப்புகள் கைகொடுக்கும். 

வாசிப்புநேரம் -
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மக்களுக்கு ஆதரவு வழங்க புதிய கட்டமைப்பு

படம்: AFP

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மக்களுக்கு ஆதரவு வழங்க பல்வேறு அரசாங்க அமைப்புகள் கைகொடுக்கும்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் அவசரகால உதவி நடவடிக்கைக் குழுவான HEART கட்டமைப்பின் மூலம் அது சாத்தியமாகும்.

குற்றவியல், உளவியல் செயல்பாடுகள் குறித்த ஆசிய மாநாட்டில் HEART கட்டமைப்பு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோஸஃபின் தியோ மாநாட்டில் கலந்துகொண்டார்.

ஏப்ரல் மாதம் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 250க்கும் அதிகமானோர் மாண்டனர். அதனால், பெரும்பாலோர் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இன்றி, கவலை, அச்சம் போன்ற உணர்வுகளால் பாதிக்கப்பட்டனர்.

நியூசிலந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 51 பேர் கொல்லப்பட்டனர். அப்போது, ஆலோசனை கேட்டு அந்நாட்டின் தேசிய மனநல சுகாதார அமைப்புக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான அழைப்புகள் கிடைக்கப்பெற்றன.

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டால் மனரீதியாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு ஆதரவளிக்க பொதுச்சேவை அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவது முக்கியம்.

தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வர, திறன் மட்டுமே போதாது. சமூகத்தை மனரீதியாகத் தயார் செய்வதும் அவசியம் என்று திருமதி ஜோஸஃபின் தியோ கூறினார்.

இன்றைய மாநாட்டில் 13 நாடுகளைச் சேர்ந்த 430 பேர் பங்கேற்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்