Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையத் தாக்குதல்கள், பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் சிங்கப்பூர் விழிப்புடன் இருக்கவேண்டும் - மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது

இணையத் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், பயங்கரவாத அச்சுறுத்தலும் நீடிப்பதால், சிங்கப்பூர், தொடர்ந்து விழிப்புடன் இருப்பது அவசியம் என்று, தற்காப்புக்கான மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது வலியுறுத்தியுள்ளார்.

வாசிப்புநேரம் -

அத்தகைய அச்சுறுத்தல்களைத் தடுத்து நிறுத்த, 3 வழிகள் இருப்பதாக அவர் கூறினார்.

சிறந்த நடைமுறைகளை அரசாங்கங்கள் பகிர்ந்துகொள்வது, இருதரப்பு ஒத்துழைப்புக்கான உடன்பாடுகளைப் பரிசீலிப்பது, நடைமுறைக்கு ஏற்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவது முதலியவற்றைத் திரு. ஸாக்கி குறிப்பிட்டார்.

உள்நாட்டு சவால்களைச் சமாளிப்பதில் அதிக கவனம் செலுத்துவதால், உலக அளவில் மேற்கொள்ளக்கூடிய ஒருங்கிணைந்த முயற்சிகள் தடைபடும் அபாயம் உள்ளதை அவர் சுட்டினார்.

அனைத்து நாடுகளும் ஒத்துழைத்தால் மட்டுமே, பொதுவான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்குத் தீர்வு காண முடியும் என்றார் திரு. ஸாக்கி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்