Images
  • Blood test
    படம்: AFP

COVID-19: சிங்கப்பூரின் வட்டாரப் பரிசோதனைக் கூடங்களுக்கு வெளியே காத்திருந்த நூற்றுக்கணக்கானோர்

சிங்கப்பூரின் வட்டாரப் பரிசோதனைக் கூடங்களுக்கு வெளியே இன்று காலை, நூற்றுக்கணக்கானோர் வரிசைபிடித்து நின்றனர்.

டான் டொக் செங் மருத்துமனைக் குழுமத்துடன் தொடர்புடைய சம்பவங்களைக் கண்டறியும்நோக்கில், அந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

சமூகத்தில் மறைந்திருக்கும் கிருமிப்பரவல் சம்பவங்களைக் கண்டுபிடிக்க அது உதவும்.

டான் டொக் செங் மருத்துவமனைக் குழுமம் தற்போது நாட்டில் நிலவும் ஆகப் பெரிய குழுமமாகும்.

டான் டொக் செங் மருத்துவமனைக் குழுமத்துடன் தொடர்பில் இருந்திருக்கக்கூடிய நபர்களுக்கான கண்காணிப்புப் பரிசோதனையின் முதல் நாள் இன்று.

டான் டொக் செங் மருத்துவமனையிலிருந்து முன்னதாக வெளியேறிய நோயாளிகள், வருகையாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இருந்த பொது இடங்களுக்குச் சென்றவர்கள் ஆகியோர் பரிசோதனை செய்துகொள்ளத் திரண்டனர்.

பீஷானில் உள்ள நிலையத்தில், சிலர் 5 மணி நேரம்வரை காத்திருந்தனர்.

கட்டுமானம், கடல்துறை, பெட்ரோலிய ரசாயனத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும், தங்களின் வழக்கமான பரிசோதனைக்காக அந்த நிலையத்திற்குச் சென்றிருந்தனர்.

அங் மோ கியோ நிலையத்திலும், பலர் பரிசோதனை செய்துகொள்ளச் சென்றிருந்தனர்.

நண்பகல்வாக்கில், அங்கும் நீண்ட வரிசை காணப்பட்டது.

கண்காணிப்புப் பரிசோதனைகள் வரும் 16ஆம் தேதிவரை நடத்தப்படுகின்றன.

பரிசோதனை நிலையங்கள், தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை செயல்படுகின்றன. 

Top