Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தைப்பூசம் 2022 இல் பாத ஊர்வலம் நடைபெறாது - காவடிகளுக்கு அனுமதி இல்லை

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில் பாத ஊர்வலத்திற்கு அனுமதியில்லை  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தைப்பூசம் 2022 இல் பாத ஊர்வலம் நடைபெறாது - காவடிகளுக்கு அனுமதி இல்லை

(கோப்புப் படம்: AFP/Roslan RAHMAN)

சிங்கப்பூரில் அடுத்த மாதம் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருக்கும் தைப்பூசத் திருவிழாவில் பாத ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசத்தன்று சிராங்கூன் ரோட்டிலுள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்திலிருந்து டேங்க் ரோட்டிலுள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம் வரையில் பாத ஊர்வலம் நடைபெறாது.

முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மட்டுந்தான் ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயத்திற்குள் அனுமதி வழங்கப்படும்.

பக்தர்கள் ஆலயத்தில் முன்பே தயாரிக்கப்பட்ட
பால்குடங்களைத் தவிர பழம், பூ, உணவு உள்ளிட்ட மற்றவகைப் பொருள்களைக் காணிக்கையாகச் செலுத்த முடியாது.

பால்குடங்களைச் செலுத்த முன்பதிவு செய்திருக்க வேண்டும்.

அலகுக் காவடிகள் உள்ளிட்ட எல்லா விதமான காவடிகளுக்கும் எதிர்வரும் தைப்பூசத்தில் அனுமதியில்லை.

பொதுமக்கள் தைப்பூச தினத்தன்று கோவிலுக்குள் சென்று வழிபட விரும்பினால் முன்பதிவுகள் அவசியம்.

COVID-19 நோய்த்தொற்றுக் காலத்தில் தைப்பூசத் திருவிழா நடப்பதால் பக்தர்களும் பொதுமக்களும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொண்டது.

முன்பதிவுகள் விரைவில் ஆலயத்தின் இணையப்பக்கத்தில் வெளியிடப்படும் என்று
ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலயம் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்