Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2015 தைப்பூசத்தில் கைகலப்பில் சம்பந்தப்பட்ட மூவருக்குச் சிறை, அபராதம்

சிங்கப்பூர்: 2015ஆம் ஆண்டுத் தைப்பூசத்தில் நடந்த கைகலப்பில் சம்பந்தப்பட்ட மூவருக்குப் பெரிய அளவிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
2015 தைப்பூசத்தில் கைகலப்பில் சம்பந்தப்பட்ட மூவருக்குச் சிறை, அபராதம்

(படம்: CNA)

சிங்கப்பூர்: 2015ஆம் ஆண்டுத் தைப்பூசத்தில் நடந்த கைகலப்பில் சம்பந்தப்பட்ட மூவருக்குப் பெரிய அளவிலான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவருக்குச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

35 வயது ராமச்சந்திரா சந்திரமோகனுக்கு ஓராண்டு ஒரு வாரச் சிறைத்தண்டனையும் $8,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

வர்த்தகரான அவர் ஏழு குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என்று கடந்த மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் மூவரைத் தாக்கிய மூன்று குற்றச்சாட்டுகள், காவல்துறை அதிகாரி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டிய இரண்டு குற்றச்சாட்டுகள், ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட ஒரு குற்றச்சாட்டு, முஸ்லிம் அதிகாரி ஒருவரின் சமயத்தை அவமதித்த ஒரு குற்றச்சாட்டு ஆகியவை அவை.

அபராதத்தைச் செலுத்துவதற்கு பதிலாக ராமச்சந்திரா சந்திரமோகன் கூடுதலாக 3 வாரம் 5 நாட்கள் சிறையில் இருக்க முடிவுசெய்தார்.

31 வயது ஜெய குமார் கிருஷ்ணசாமிக்கு $8,500 அபராதம் விதிக்கப்பட்டது.

3 குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. . ராமச்சந்திரா சந்திரமோகனை அழைத்துச் செல்லவிடாமல் காவல்துறை அதிகாரிகளைத் தடுத்தது அவற்றில் ஒன்று.

மூன்றாம் நபரான 36 வயது குணசேகரன் ராஜேந்திரனுக்கு $8,000 அபராதம் விதிக்கப்பட்டது.

அவர் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.

2015இல் தைப்பூச ஊர்வலத்தில் உறுமி வாசித்த குழுவைக் காவல்துறை அதிகாரிகள் நிறுத்தியபோது கைகலப்பு மூண்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்