Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை தேடுவோர் பொருத்தமான வேலைகளில் சேர்வதை உறுதிசெய்ய முதலாளிகளுக்கும் வேலை தேடும் உள்ளூர்வாசிகளுக்கும் கூடுதல் ஆதரவு

முதலாளிகளும் வேலை தேடும் உள்ளூர்வாசிகளும், ஏற்கனவே உள்ள வேலைகளை நிரப்புவதிலும் புதிய வேலைகளைப் பெறுவதிலும் கூடுதல் உதவிகளைப் பெறவுள்ளனர்.

வாசிப்புநேரம் -
வேலை தேடுவோர் பொருத்தமான வேலைகளில் சேர்வதை உறுதிசெய்ய முதலாளிகளுக்கும் வேலை தேடும் உள்ளூர்வாசிகளுக்கும் கூடுதல் ஆதரவு

(கோப்புப் படம்: Ministry of Communications and Information)

முதலாளிகளும் வேலை தேடும் உள்ளூர்வாசிகளும், ஏற்கனவே உள்ள வேலைகளை நிரப்புவதிலும் புதிய வேலைகளைப் பெறுவதிலும் கூடுதல் உதவிகளைப் பெறவுள்ளனர்.

அதன் தொடர்பில் தேசிய வேலை மன்றம் 3 அமைப்புகளின் உதவியை நாடியுள்ளது.

அந்த அமைப்புகள் வேலைகளை மறுவடிவமைப்பு செய்வதிலும் தகுந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும்.

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம், வங்கி- நிதிச்சேவைக் கழகம், தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வேலை நியமன, வேலைத்தகுதிக் கழகம் ஆகியவை இணைந்து அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளன.

மூத்த அமைச்சரும், தேசிய வேலை மன்றத்தின் தலைவருமான திரு. தர்மன் சண்முகரத்னம் அதனைத் தெரிவித்தார்.

முதலாளிகளுக்கும் வேலை தேடுவோருக்கும் தேவையான பயிற்சித் திட்டங்களை உருவாக்குவதில் அவை ஈடுபடும் என்று அவர் கூறினார்.

வேலை தேடுவோரின் எண்ணிக்கையைவிட அதிகமான வேலை வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன.

இருப்பினும் வேலை தேடுவோர் பொருத்தமான வேலைகளில் சேர்வதை உறுதிசெய்யவேண்டும் என்றார் அவர்.

கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் ஊழியர்கள் தங்களை முன்னதாகவே தயார்ப்படுத்திக்கொள்வதன் அவசியத்தைத் திரு. தர்மன் எடுத்துரைத்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்