Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்டால் பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்கலாம் : மூத்த அமைச்சர் தர்மன்

நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்டால் பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்கலாம் : மூத்த அமைச்சர் தர்மன்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதன் மூலமே அடுத்த பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்கமுடியும் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அதிகரித்துவரும் போட்டியைச் சமாளிப்பது அதில் முதன்மையானது என்றார் அவர்.

பெய்ச்சிங்கில் நடைபெறும் Bloombergஇன் புதிய பொருளியல் மாநாட்டில், வர்த்தகத் தலைவர்கள் முன் திரு. தர்மன் உரையாற்றினார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொழில்நுட்பப் போட்டி அதிகரித்தால், விநியோகச் சங்கிலி பிளவுபடும் சாத்தியம் அதிகம் என்பதைத் திரு. தர்மன் சுட்டினார்.

பெய்ச்சிங், வாஷிங்டன் இரண்டுக்கும் இடையிலான உறவைச் சரியாக கையாளத் தவறினால், புத்தாக்கமும் உற்பத்தித்துறையின் வளர்ச்சியும் மெதுவடையக்கூடும் என்று அவர் கூறினார்.

தற்போதைய பிரச்சினைகளுக்குப் பணம் மட்டுமே தீர்வாக அமையாது.

தன்னம்பிக்கை, புத்தாக்கம் ஆகியவற்றின் மூலம் தீர்வுகளைக் காண முடியும் என அமைச்சர் தர்மன் கூறினார்.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்