Images
  • listing
    (படம்: HSA)

இணைய வர்த்தகத் தளங்களின் பட்டியலிலிருந்து 3,200 பொருள்கள் நீக்கப்பட்டுள்ளன

சுகாதார அறிவியல் ஆணையம், இவ்வாண்டின் முதல் 5 மாதங்களில் இணைய வர்த்தகத் தளங்களின் பட்டியலிலிருந்து 3,200 பொருள்களை நீக்கியுள்ளது.

அந்தச் சட்டவிரோதமான சுகாதாரப் பொருள்கள், ஜனவரி மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அகற்றப்பட்டன.

பெரும்பாலான பொருள்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கான மருந்துகள்.

அந்த மருந்துகளைப் பொதுவாக, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பெற முடியும் என்று ஆணையம் சொன்னது.

இந்நிலையில், இணைய வர்த்தகத்தளங்களில் விற்கப்பட்ட மருந்துகள், தனிநபர்களுப் பரிந்துரைக்கப்பட்டவை அல்லது மிச்சப்பட்டவை என்று கூறப்பட்டது.

மருந்தைப் பெறுவதற்கு மருத்துவரின் பரிந்துரை அவசியம் என்பதை அறியவில்லை என்று விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.

பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட பொருள்களில், எடைக்குறைப்பு மாத்திரைகள், முக ஒப்பனைப் பொருள்கள் போன்றவையும் அடங்கும்.

அவற்றுள், தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் அல்லது மருத்துவ மூலப்பொருள்கள் போன்றவை கலக்கப்பட்டதாக ஆணையம் குறிப்பிட்டது.

விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்தது.

Top