Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ராக்மெலன் பழங்களால் இனி பாதிப்பு இல்லை - சுகாதார அமைச்சு

ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்ட ராக்மெலன் பழங்களால் இனி பாதிப்பு இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ராக்மெலன் பழங்களால் இனி பாதிப்பு இல்லை - சுகாதார அமைச்சு

கோப்புப் படம்: Channel NewsAsia

ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்ட ராக்மெலன் பழங்களால் இனி பாதிப்பு இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

லிஸ்டிரியா (Listeria) கிருமித்தொற்று குறித்த அச்சத்தால், மார்ச் மாதத்தில், ஆஸ்திரேலிய ராக்மெலன் பழங்கள் கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டன.

சிங்கப்பூரில், இந்த ஆண்டு லிஸ்டிரியா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு நிறைவடைந்ததாக அமைச்சு குறிப்பிட்டது. கிருமியின் மரபணுத் தொடர் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அவர்களில், இரு நோயாளிகளுக்கு, ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு பாதிப்பு ஏற்படுத்திய லிஸ்டிரியா கிருமி வகையைப் போன்ற அதே பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

அந்த இருவரில் ஒருவர் குணமடைந்தார். மற்றொருவர் வேறு உடல்நலப் பிரச்சினையால் மாண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்