Images
  • ica

சிங்கப்பூருக்குள் என்னென்ன கொண்டுவரலாம், கொண்டுவரக்கூடாது?

வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு வரும் சிங்கப்பூரர்களும், சுற்றுப்பயணிகளும் சிங்கப்பூருக்கு வரும்போது சில பொருள்களைக் கொண்டு வருவதில் கவனம் தேவை.

சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படாத பொருள்கள்:

- 'Chewing gum' எனப்படும் மெல்லும் பசை (மருத்துவக் காரணங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படலாம்)
- புகையிலை மற்றும் அதனைப் போன்ற குணமுள்ள பொருள்கள்
- துப்பாக்கி வடிவம் கொண்ட சிகரெட் பற்ற வைக்கும் கருவி
- போதைப்பொருள்
- பட்டாசுகள்
- ஆபாசக் காட்சிகளைக் கொண்ட பிரசுரங்கள், காணொளிகள், மென்பொருள்
- அருகிவரும் இனத்தைச் சேர்ந்த உயிரினங்களும் அவை சம்பந்தப்பட்ட பொருள்களும்
- மறைக்கப்பட்ட ஆயுதங்கள்

சிங்கப்பூருக்குள் கொண்டுவரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்கள்:

கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருள்களைத் தகுந்த உரிமம் அல்லது அனுமதியுடன் சிங்கப்பூருக்குள் கொண்டுவரலாம்.

- விலங்குகள், பறவைகள் மற்றும் அவற்றால் செய்யப்படும் பொருள்கள்
- அருகிவரும் உயிரினங்கள்
- அழகுக்காக வளர்க்கப்படும் மீன்கள்
- செடிகள்
- பழங்களும் காய்கறிகளும்
- துப்பாக்கி துளைப்பதிலிருந்து பாதுகாக்கும் கவசங்கள்
- பொம்மைத் துப்பாக்கிகள்
- ஒலி வட்டுகள், கணினி விளையாட்டுகள்
- மருந்துப்பொருள்கள்

கூடுதல் விவரங்களுக்கு குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் இணையப்பக்கத்தை நாடலாம்: https://www-ica-gov-sg-admin.cwp.sg/enteranddeparting/before/enteranddeparting_prohibitedcontrolleditems

Top