Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டிய 'திரைக்கவி'

மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் முயற்சியாக, 'திரைக்கவி' எனும் குறும்படத் தயாரிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

வாசிப்புநேரம் -
மாணவர்களிடம் தமிழ் இலக்கியத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டிய 'திரைக்கவி'

படங்கள்: நிஜாம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் முயற்சியாக, 'திரைக்கவி' எனும் குறும்படத் தயாரிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றம் மேற்கொண்டுள்ள புதிய முயற்சி திரைக்கவி.

குறும்படம் எடுப்பதும் காணொளிகள் உருவாக்குவதும் இன்றைய இளையர்களுக்கு மிகவும் பிடித்த அம்சங்கள். அவற்றில் இலக்கிய ஆர்வத்தைப் புகுத்துவது திரைக்கவியின் நோக்கம்.

கடந்த டிசம்பர் 9,16 ஆகிய தேதிகளில், குறும்படத் தயாரிப்பு தொடர்பான பயிலரங்கு நடத்தப்பட்டது.

உயர் கல்வி நிலைய மாணவர்கள் அதில் பங்கேற்றனர்.

தயாரிப்புக்கு முந்தைய திட்டமிடல், காட்சிகளை எவ்வாறு மென்பொருள் மூலம் தொகுப்பது போன்ற நுட்பங்களை பயிலரங்கின் நடத்துனர் சலீம் ஹாடி மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

அதன் பிறகு மாணவர்கள் தங்களுக்கு பிடித்த உள்ளூர் இலக்கியத்தைக் கருப்பொருளாகக் கொண்டு ஒரே அறைக்குள் குறும்படத்தைத் தயாரித்தனர்.

சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்ச்சியில் அவை திரையிடப்பட்டன.

குறும்படங்கள் இளைஞர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்கிறது என்ற கருத்தை மையமாக கொண்டு உரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சுமார் 200 பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்