Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மாணவர்களால் நடத்தப்படும் Superfudo உணவகம்

சிங்கப்பூரில் ஒருசில உணவுக் கடைகள் அதிகரிக்கும் செலவுகளாலும் மனிதவளப் பற்றாக்குறையாலும் அவற்றின் தொழிலைத் தொடரச் சிரமப்படுகின்றன. 

வாசிப்புநேரம் -
மாணவர்களால் நடத்தப்படும் Superfudo உணவகம்

படம்: Neo Rong Wei/TODAY

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சிங்கப்பூரில் ஒருசில உணவுக் கடைகள் அதிகரிக்கும் செலவுகளாலும் மனிதவளப் பற்றாக்குறையாலும் அவற்றின் தொழிலைத் தொடரச் சிரமப்படுகின்றன.

அதற்கு விதிவிலக்காக உள்ளது Superfudo உணவகம்.

புரதச்சத்து சார்ந்த உணவுவகைகள் அங்கு விற்கப்படுகின்றன. Superfudo உணவகத்தை மாணவர்களே முழுமையாக வழிநடத்துகின்றனர். சாதாரண வேலையிலிருந்து நிர்வாகம் வரை  அனைத்தையும் மாணவர்களே பார்த்துக்கொள்கின்றனர்.

அதன்மூலம் மாதந்தோறும் ஊழியர் செலவுகளை 15,000 வெள்ளிக்குக் குறைவாக வைத்துக்கொள்ள முடிவதாக உணவகத்தைத் தோற்றுவித்தவர்களின் ஒருவரான ஜோசப் ஸு TODAYயிடம் தெரிவித்தார்.

நாள்தோறும் உணவகம் 13 மணிநேரத்திற்குச் செயல்படுகிறது. அதற்கு  இரண்டு இடங்களில் கிளைகள் உள்ளன. ஒன்று ஹாலந்து வில்லேஜில். மற்றொன்று  International Building கட்டடத்தில்.

15 வயதுக்கும் 23 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 80 மாணவர்கள் அங்குப் பணிபுரிகின்றனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்