Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாம்சன் இயற்கைப் பூங்கா பொதுமக்களுக்குத் திறப்பு

சிங்கப்பூரின் இயற்கைப் பாதுகாப்பு முயற்சிகளை அதிகப்படுத்தும் நோக்கில் 50 ஹெக்டர் அளவுகொண்ட புதிய இயற்கைப் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் இயற்கைப் பாதுகாப்பு முயற்சிகளை அதிகப்படுத்தும் நோக்கில் 50 ஹெக்டர் அளவுகொண்ட புதிய இயற்கைப் பூங்கா இன்று திறக்கப்பட்டுள்ளது.

தாம்சன் இயற்கைப் பூங்கா சிங்கப்பூரின் 7ஆவது இயற்கைப் பூங்கா.

அழிவை எதிர்நோக்குவதாகப் பட்டியலிடப்பட்டுள்ள பல விலங்குகளின் வசிப்பிடமான மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிக்கு அருகே, அது அமைந்துள்ளது.

ஓல்டு அப்பர் தாம்ஸன் ரோட்டுக்கும் , அப்பர் தாம்ஸன் ரோட்டுக்கும் இடையில் உள்ளது அந்தப் பூங்கா.

பொதுவாகவே, இயற்கை வனப் பகுதியிலிருக்கும் விலங்குகள் சாலைகளைக் கடந்து அத்தகைய இயற்கைப் பூங்காக்களுக்குச் செல்வது வழக்கம்.

விலங்குகள் சாலை விபத்துகளில் கொல்லப்படும் சாத்தியத்தைக் கருத்தில்கொண்டு, புதிய எச்சரிக்கை முறை சோதிக்கப்படுவதாய் தேசியப் பூங்காக் கழகமும், நிலப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்தன.

விலங்குகள் அருகிலிருந்தால் வாகனமோட்டிகளுக்கு அதுகுறித்து எச்சரிக்கை செய்யக் கண்காணிப்புக் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வாகனத்தின் வேகத்தையும் அது பதிவுசெய்யும். எச்சரிக்கைக்குப் பிறகு வாகனத்தின் வேகம் குறைக்கப்படுகிறதா என்றும் மதிப்பிடப்படும்.

அந்தத் தொழில்நுட்பம் ஓராண்டுக்கு சோதிக்கப்படும். பின்னர் மற்ற சாலைகளுக்கும் அது விரிவுபடுத்தப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்