Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Midges ஈயின் தொல்லையை முறியடிப்பதற்குக் களமிறங்கும் மீன்கள்

Midges எனப்படும் ஒருவகை ஈயின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பொதுப் பயனீட்டுக் கழகம் ஆயிரக்கணக்கான மீன்களை பாண்டான் நீர்த்தேக்கத்தில் விட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
Midges ஈயின் தொல்லையை முறியடிப்பதற்குக் களமிறங்கும் மீன்கள்

படம்: Facebook/PUB

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Midges எனப்படும் ஒருவகை ஈயின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பொதுப் பயனீட்டுக் கழகம் ஆயிரக்கணக்கான மீன்களை பாண்டான் நீர்த்தேக்கத்தில் விட்டுள்ளது. 

உயிரியல் கட்டமைப்பைப் பாதிக்காதவண்ணம் மீன்கள் படிப்படியாக நீர்த்தேக்கத்தில் விடப்படுவதாகக் கழகம் தனது Facebook பதிவில் தெரிவித்தது.

Midges ஈக்களைக் கொசுக்கள் என்று பரவலாகப் பார்ப்பதுண்டு. அவை கொசுக்கள் அல்ல. 

Midges ஈக்கள் யாரையும் கடிப்பதில்லை. நோய்களையும் பரப்புவதில்லை. இருப்பினும் பெரும் எண்ணிக்கையில் அவை இருக்கும்போது அவை தொல்லையாக இருக்கலாம் என்று பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்