Images
  • grab
    படம்:REUTERS/Edgar Su/Files

GrabHitch சேவையில் $40,000 மோசடிப் பரிவர்த்தனைகள் செய்தவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

GrabHitch கார் பகிர்வுச் சேவைக்கான கட்டண மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 10 பேர் கைதுசெய்யப்பட்டு, மூன்று பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

40,000 வெள்ளிக்கு மேல் கட்டண மோசடி நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் 19 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

அவர்களில் 3 பேர், அந்த மோசடிக்குத் திட்டமிட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கடந்த மாதம், Grab-Hitch சேவை வழங்கும் ஓட்டுநர்களின் கணக்குகளில் முறைகேடுகள் இருப்பதைக் கண்டுபிடித்த Grab நிறுவனம் அது குறித்துக் காவல்துறையிடம் புகார் கொடுத்தது.

இவ்வாண்டு பிப்ரவரி, ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், ஈராயிரத்துக்கும் அதிகமான பரிவர்த்தனைகளில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குறைந்தது 13 ஓட்டுநர்களின் கணக்குகள் அதில் சம்பந்தப்பட்டுள்ளன.


Top