Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

5 வயதுச் சிறுவனைத் தரையில் வீசிக் காயப்படுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

முதுகெலும்பில் காயங்கள் ஏற்படும் வகையில் ஐந்து வயதுச் சிறுவனை இருமுறை தரையில் வீசிய பணிப்பெண்ணுக்கு 8 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
5 வயதுச் சிறுவனைத் தரையில் வீசிக் காயப்படுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை

(படம்: Facebook/Legit Singapore)

முதுகெலும்பில் காயங்கள் ஏற்படும் வகையில் ஐந்து வயதுச் சிறுவனை இருமுறை தரையில் வீசிய பணிப்பெண்ணுக்கு 8 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த அந்த 24 வயது பணிப்பெண் சிறுவனைத் துன்புறுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

மார்ச் 12 அன்று பொங்கோலிலுள்ள திடலுக்குச் சிறுவனை அழைத்துச் சென்றிருக்கிறார் பணிப்பெண்.

சிறுவனைத் தூக்க முயன்றபோது அவன் முரண்டு பிடித்ததால் சினமடைந்து அவனைத் தரையில் வீசியிருக்கிறார் பணிப்பெண்.

வீடு திரும்பியபோது தாயாரிடம் அது பற்றிச் சிறுவன் கூறியிருக்கிறான்.

ஆனால் சிறுவன் பொய் சொல்வதாகக் கூறிப் பணிப்பெண் தப்பித்துக்கொண்டார்.

இருப்பினும் சம்பவத்தை நேரில் கண்ட ஒரு பெண் அதனைக் காணொளி எடுத்திருக்கிறார். அந்தக் காணொளி Facebookஇல் வெகுவாகப் பரவ, அதில் தம்முடைய மகனையும் பணிப்பெண்ணையும் அடையாளம் கண்டு காவல்துறையிடம் புகார் செய்திருக்கிறார் சிறுவனின் தாயார்.

சிறுவனைத் துன்புறுத்தியதற்குப் பணிப்பெண்ணுக்கு அதிகபட்சமாக நான்கு ஆண்டுச் சிறைத்தண்டனையும் 4,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்