Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலிவான விலையில் இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகளா? அவசரப்பட வேண்டாம்!

கடந்தாண்டு, குறிப்பாக இசை நிகழ்ச்சி நுழைவுச் சீட்டு விற்பனை சம்பந்தப்பட்ட, குறைந்தது 120 இணைய விற்பனை மோசடிச் சம்பவங்கள் பதிவாகின.

வாசிப்புநேரம் -
மலிவான விலையில் இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டுகளா? அவசரப்பட வேண்டாம்!

(படம்:Facebook/WINNER)

iKON, WINNER ஆகிய K-pop இசைக் குழுக்கள் சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகள் மலிவான விலையில் இணையத்தில் விற்கப்படுவது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொதுமக்களுக்குக் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்தாண்டு, குறிப்பாக இசை நிகழ்ச்சி நுழைவுச் சீட்டு விற்பனை சம்பந்தப்பட்ட, குறைந்தது 120 இணைய விற்பனை மோசடிச் சம்பவங்கள் பதிவாகின.

அவற்றால் பாதிக்கப்பட்டோர், பணம் செலுத்திய பின் நுழைவுச் சீட்டுகளைப் பெறவில்லை அல்லது போலியான அல்லது செல்லுபடியாகாத சீட்டுகளைப் பெற்றனர்.

நம்ப முடியாத விலைகளில் நுழைவுச் சீட்டுகள் விற்கப்பட்டால் அவற்றை வாங்க அவசரப்பட வேண்டாம் என்று பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பிறகு கட்டணத்தைச் செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்