Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

TikTok காணொளிச் சவாலுக்காக அரசாங்கச் சொத்தை சேதப்படுத்திய சந்தேகத்தில் 2 பதின்மவயதினர் மீது காவல்துறை விசாரணை

TikTok காணொளிச் சவாலுக்காக அரசாங்கச் சொத்தை சேதப்படுத்திய சந்தேகத்தில் 2 பதின்மவயதினர் மீது காவல்துறை விசாரணை 

வாசிப்புநேரம் -
TikTok காணொளிச் சவாலுக்காக அரசாங்கச் சொத்தை சேதப்படுத்திய சந்தேகத்தில் 2 பதின்மவயதினர் மீது காவல்துறை விசாரணை

படம்: AFP

TikTok காணொளிச் சவாலுக்காக அரசாங்கச் சொத்தை சேதப்படுத்திய சந்தேகத்தில் 2 பதின்மவயதினர் மீது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இருவரும் வெவ்வேறு சம்பவங்களுக்காக விசாரிக்கப்படுகிறார்கள்.

தற்போது TikTok தளத்தில் "devious licks" என்னும் சவால் பிரபலமாக உள்ளது.

பள்ளிச் சொத்துகளை சேதப்படுத்துவது அல்லது திருடுவது என்பது அந்தச் சவாலின் நோக்கம். அதைக் காணொளியாகத் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சந்தேக நபர்கள் அரசாங்கச் சொத்தைச் சேதப்படுத்தும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவிவருவது தங்களுக்குத் தெரியும் என்று காவல்துறை தெரிவித்தது.

செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஒரு சிறுவன் காக்கி புக்கிட் ரயில் நிலையத்தின் அறிவிப்புப் பலகையை வைத்திருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் வந்தது.

அதன் பின்னர் காவல்துறை அந்த 15 வயதுச் சிறுவனை அடையாளம் கண்டு பலகையை மீட்டது.

மற்றொரு சம்பவமும் அதே நாளில் நடந்தது. இரவு 9:30 மணிக்கு சிறுவன் ஒருவன் தேசியச் சுற்றுப்புற அமைப்பின் அறிவிப்புப் பலகையை வைத்துக்கொண்டிருக்கும் TikTok காணொளி பற்றிக் காவல்துறைக்குத் தகவல் வந்தது.

அதன் பின்னர் காவல்துறை அந்த 14 வயதுச் சிறுவனை அடையாளம் கண்டது.

காணொளியைப் பதிவு செய்து விட்டு சிறுவன் மீண்டும் பலகையை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

அரசாங்கச் சொத்தை சேதப்படுத்துவோருக்கு 3 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, 2,000 வெள்ளி வரையிலான அபராதம், மூன்று முதல் எட்டு பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

பொதுமக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டது.


- CNA/ad(ac) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்