Images
  • crime
    (படம்: Today)

Timeshare மோசடியில் சம்பந்தப்பட்டிருக்கும் மூவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Timeshare எனும் விடுமுறைப் பகிர்வுத் திட்ட மோசடியில் சம்பந்தப்பட்டிருக்கும் மூவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விடுமுறைப் பகிர்வுத் திட்டத்தில் முதலீடு செய்த உறுப்பினர்களின் பணத்தை மீட்டுத் தர முடியும் என்று கூறி, உறுப்பினர்களை ஏமாற்றியதன் தொடர்பில் சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹரியண்டோ அப்துல் ஹமீது (Herianto Abdul Hamid), ஜஸ்டின் பெர்னெர்ட் கொலந்த் (Justin Bernard Colond), தமிழ்மணி ராஜாமணி ஆகியோர் அந்த மூவர்.

2012க்கும் 2013க்கும் இடைப்பட்ட காலத்தில் 20 Timeshare உறுப்பினர்களை அவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

ஏமாற்றப்பட்ட மொத்த தொகையின் மதிப்பு 200,000 வெள்ளி.
இம்மாதம் 26ஆம் தேதி அது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படக்கூடும்.

Top