Images
  • celine
    (படம்:Alix Malka)

சிங்கப்பூருக்கு வருகிறார் டைட்டானிக் பாடகி செலின் டியோன்

பிரபலமான டைட்டானிக் திரைப்படத்தில் இடம்பெற்ற "My Heart Will Go On" கருப்பாடலைப் பலரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அந்த ஒரே பாடலால் உலகப் புகழ்பெற்ற பிரெஞ்ச்-கனடியப் பாடகி செலின் டியோன் சிங்கப்பூரில் நிகழ்ச்சி படைக்க வருகிறார். 

வரும் ஜூலை 3, 4 தேதிகளில் அவர் மரினா பே சாண்ட்ஸ் கிராண்ட் பால்ரூமில் பாடவிருக்கிறார். 

சிங்கப்பூரில் அவர் நிகழ்ச்சி படைப்பது இதுவே முதன்முறை. 

2008ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிய நகரமொன்றில் அவர் பாடவிருப்பதும் இதுவே முதன்முறை. 

ஜூன் 26ஆம் தேதி தோக்கியோவில் தொடங்கும் ஆசியப் பயணத்தின் ஒருபகுதியாக, செலின் டியோன் சிங்கப்பூர் வருகிறார். 

உலகில் ஆக அதிகம் விற்பனையான இசைவட்டுகளை வெளியிட்ட பெண் கலைஞர்களில் ஒருவரான செலின் டியோன், ஐந்து கிராமி விருதுகளை வென்றவர். 

 

Top