Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்ற 5 கடைகள் மீது நடவடிக்கை

19 வயதுக்கும் குறைவானவர்களுக்குச் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை விற்ற ஒரு கடையின் உரிமம் மீட்டுக் கொள்ளப்பட்டதாகச் சுகாதார, அறிவியல் ஆணையம் தெரிவித்ததுள்ளது.

வாசிப்புநேரம் -
வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் விற்ற 5 கடைகள் மீது நடவடிக்கை

(படம்: சுகாதார, அறிவியல் ஆணையம்)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

19 வயதுக்கும் குறைவானவர்களுக்குச் சட்டவிரோதமாக சிகரெட்டுகளை விற்ற ஒரு கடையின் உரிமம் மீட்டுக் கொள்ளப்பட்டதாகச் சுகாதார, அறிவியல் ஆணையம் தெரிவித்ததுள்ளது.

பள்ளிச் சீருடை அணிந்திருந்த 17வயது மாணவருக்குப் புகையிலைப் பொருளை விற்றதைத் தொடர்ந்து 635, அங் மோ கியோ அவென்யூ 6இல் உள்ள Lian Lee Super Mart சில்லறை விற்பனைக் கடையின் உரிமம் மீட்டுக்கொள்ளப்பட்டது.

விற்பனையாளர், வாடிக்கையாளரின் வயதை உறுதி செய்துகொள்ளாமல், புகையிலைப் பொருளை விற்றுள்ளார்.

மேலும் அதேபோன்ற குற்றத்தை முதன்முறையாகப் புரிந்த 4 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

(படம்: சுகாதார, அறிவியல் ஆணையம்)

ஆணையத்தின் கண்காணிப்பு, அமலாக்க விதிமுறைகளின்கீழ் அந்தக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட கடைகளின் விவரங்கள் :

அவை 6 மாதங்களுக்குப் புகையிலைப் பொருட்களை விற்க முடியாது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்