Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

The Online Citizen இணையத்தளத்தின் ஆசிரியர் மீது அவதூறு குற்றச்சாட்டு

டி கோஸ்ட்டா அனுமதியின்றி கணினி சாதனங்களைப் பயன்படுத்தியதாக இன்னொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார்.  

வாசிப்புநேரம் -
The Online Citizen இணையத்தளத்தின் ஆசிரியர் மீது அவதூறு குற்றச்சாட்டு

(படம்: Jeremy Long)

சிங்கப்பூர் அரசாங்கத்தில் ஊழல் நடப்பதாக வெளிவந்த கட்டுரை தொடர்பில் The Online Citizen இணையத்தளத்தின் ஆசிரியர் டெரி சூ (Terry Xu) மீதும், கட்டுரையை எழுதிய டேனியல் டி கோஸ்ட்டா அகஸ்ட்டின் (Daniel De Costa Augustin) மீதும் இன்று (டிசம்பர் 13) அவதூறு குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

டி கோஸ்ட்டா அனுமதியின்றி கணினி சாதனங்களைப் பயன்படுத்தியதாக இன்னொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார்.

வில்லி சம் (Willy Sum) என்பவரின் மின்னஞ்சல் வாயிலாக டி கோஸ்ட்டா அந்தக் கட்டுரையை The Online Citizen இணையத்தளத்திற்குச் சமர்ப்பித்ததாகக் கூறப்பட்டது.

"The Take Away from Seah Kian Ping's Facebook Post" என்று தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரை வில்லி சம் என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்டது.

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ காலமானதற்குப் பின், சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளிடையே ஊழல் நடைபெறுவதாக செப்டம்பர் 4ஆம் தேதி பதிவுசெய்யப்பட்ட அந்தக் கட்டுரையில் எழுதப்பட்டது.

தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் கட்டளைக்கேற்ப அந்தக் கட்டுரை பின்னர் அகற்றப்பட்டது.

நவம்பர் 20ஆம் தேதி, சிங்கப்பூர்க் காவல் துறையினர் திரு. சூ, திரு. சம் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தினர்.

சூவும் டி கோஸ்ட்டாவும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

கணினி மோசடிக்காக டி கோஸ்ட்டாவுக்கு 5,000 வெள்ளி வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்