Images
  • TOC

TOC செய்தியாசிரியர் மீதான வழக்கு: 'தேவைப்பட்டால் பிரதமர் சாட்சியமளிப்பார்'

சிங்கப்பூர்: The Online Citizen (TOC) இணையப்பக்கத்தின் செய்தியாசிரியர் டெர்ரி ஷு (Terry Xu) மீதான வழக்கு, விசாரணைக்கு வரும்பட்சத்தில் தேவைப்பட்டால் பிரதமர் லீ சியென் லூங் சாட்சியமளிப்பார் என்று பிரதமரின் ஊடகச் செயலாளர் கூறியுள்ளார்.

திரு, ஷு தமது செய்தியறிக்கையில் பிரதமரைப் பற்றி எழுதிய கருத்துகள் முற்றிலும் பொய்யானவை என்று பிரதமரின் ஊடகச் செயலாளர் குறிப்பிட்டார்.

ஆக்ஸ்லி ரோடு விவகாரத்தின் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துகள் குறித்துப் பிரதமர் லீ திரு. ஷு மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

நீதிமன்றத்தில் உண்மைகள் நிரூபிக்கப்படும் என்று நேற்று(செப்டம்பர் 10) வெளியிடப்பட்ட செய்தியறிக்கை குறிப்பிட்டது.

தாம் வெளியிட்ட செய்தியறிக்கை பிரதமரை அவதூறு செய்யும் வகையில் இல்லை என்று கூறியுள்ளார் ஷு.

பிரதமரின் நற்பெயரை அறிக்கை கெடுத்துள்ளதாக அவரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

பிரதமர் லீ தம் தந்தை திரு லீ குவான் இயூவிடம் ஆக்ஸ்லி ரோடு இல்லம் குறித்துத் தவறான கருத்துகளைக் கூறியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆவணங்களில் இடம்பெற்ற கருத்துகளின் தொடர்பில் பிரதமரின் சகோதரி டாக்டர் லீ வெய் லிங் Facebook பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Top