Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

The Online Citizen இணையத் தளத்தின் உரிமம் தற்காலிக முடக்கம்

The Online Citizen (TOC) இணையத் தளத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

The Online Citizen (TOC) இணையத் தளத்தின் உரிமம் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

(செப்டம்பர் 16) நாளை மறுநாள் பிற்பகல் 3 மணியிலிருந்து அது எந்த விதமான பதிவுகளையும் அதன் தளங்களிலோ கணக்குகளிலோ சேர்க்க அனுமதிக்கப்படாது. இரண்டு வாரங்களுக்குத் தடை நீடிக்கும்.

அதற்குள், ஒளிப்பரப்புச் சட்டத்தின்படி, அந்தச் செய்தித் தளம், மேலும் தகவல்களை அளிக்கவேண்டும். தவறினால், அந்தத் தளத்தின் உரிமம் ரத்துச் செய்யப்படும் என்று தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.

காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டும், ஞாபகப்படுத்தப்பட்டும், TOC அதன் நிதி ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியது. சட்டத்தைப் பின்பற்றாமல் இருப்பதற்கு அது சரியான காரணமும் கூறவில்லை என ஆணையம் விளக்கியது.

TOC போன்று, சிங்கப்பூர் அரசியல் சார்ந்து பதிவிடும் இணையத் தளங்கள், எங்கிருந்து நிதி கிடைக்கிறது என்பதை, வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டியது அவசியம்.

வெளிநாட்டுத் தலையீட்டைத் தடுப்பதற்கு அது அவசியம் என்று ஆணையம் குறிப்பிட்டது.

உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டுத் தாக்கம் இல்லாமல் இருப்பதை, அது உறுதி செய்வதாகவும் ஆணையம் தெரிவித்தது.

பல நினைவூட்டல்களுக்கும், காலக்கெடு நீட்டிப்புக்குப் பிறகும், The Online Citizen தளம், அதன் நிதி ஆதரவு குறித்த முழுமையான தகவல்களை 2020 இன் வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கத் தவறியதாக ஆணையம் குறிப்பிட்டது.

உரிய விளக்கமளிக்க ஆணையம் நேற்று வரை அவகாசம் கொடுத்திருந்தது. ஆனால் TOC தளம், காரணத்தைத் தெளிவாகத் தெரிவிக்கவில்லை.

வருமானம் குறித்த முழுமையான நிபந்தனைகளைப் பின்பற்றி நடக்க மறுப்பதற்கு உரிய காரணத்தை வழங்க மறுத்ததால், உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்