Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்கு டோனி ஆடம் விண்ணப்பம்?

சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்கு, முன்னாள் இங்கிலாந்து, ஆர்சனல் காற்பந்தாட்டக்காரர் டோனி ஆடம் (Tony Adams) விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
தேசிய காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்கு டோனி ஆடம் விண்ணப்பம்?

(படம்: AFP)

சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளர் பொறுப்புக்கு, முன்னாள் இங்கிலாந்து, ஆர்சனல் காற்பந்தாட்டக்காரர் டோனி ஆடம் (Tony Adams) விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

அந்த விவகாரத்துடன் தொடர்புடைய வட்டாரங்கள் அதனைத் தெரிவித்தன.

அதன் தொடர்பில் சேனல் நியூஸ் ஏஷியா, குறுந்தகவல் வழி ஆடம்மைத் தொடர்பு கொண்டது.

தமது விண்ணப்பம் பற்றிய தகவலை அவர் உறுதிபடுத்தவில்லை.

இருப்பினும், சிங்கப்பூர் காற்பந்து சங்கம் புதிய பயிற்றுவிப்பாளரைத் தேடி வருவது பற்றி தாம் அறிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணியின் பயிற்றுவிப்பாளராக
V. சுந்தரமூர்த்தி இதற்கு முன் பொறுப்பேற்றிருந்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்