Images
  • oli 96.8
    படம்: Oli 96.8 Facebook 

முன்னணி 10 வானொலி நிலையங்களில் ஒலி 96.8

சிங்கப்பூரில் நேயர்கள் அதிகம் கேட்கும் முதல் பத்து வானொலி நிலையங்களின் பட்டியலில், மீடியாகார்ப்  வானொலி நிலையங்கள், 8 இடங்களைப் பிடித்துள்ளன.

ஒலி 96.8-உம் அந்தப் பட்டியலில் வந்துள்ளது. 10ஆவது நிலையில் வந்துள்ள அதனை வாரந்தோறும் 246,000 பேர் செவிமடுக்கின்றனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கும் மே மாதத்துக்கும் இடையே, Nielsen நிறுவனம் வானொலி தொடர்பில் நடத்திய கருத்தாய்வில் அது தெரிய வந்துள்ளது.


உங்கள் கருத்து

Top