Images
  • scdf

முழுமைத் தற்காப்பு தினத்தையொட்டி நாளை மறுநாள் தீவெங்கும் எச்சரிக்கை ஒலி

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தீவெங்கும் முழுமைத் தற்காப்பு தினத்தையொட்டி நாளை மறுநாள் அதன் 'முக்கியத் தகவல்' எச்சரிக்கை ஒலியை எழுப்பும்.

ஒரு நிமிடம் நீட்டிக்கும் அது, தீவு முழுதும் உள்ள பொது எச்சரிக்கைக் கட்டமைப்பின் மூலம் ஒலிபரப்பப்படும். 1942இல் பிரிட்டிஷ் துருப்புகள் ஜப்பானியர்களிடம் சரணடைந்த நேரமான மாலை மணி 6:20க்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும்.

வரலாற்று நிகழ்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை அனுசரிக்கும் வகையில் பொது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது.

அந்த நேரத்தில் பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

SGSecure செயலியிலும் எச்சரிக்கை ஒலி சுமார் 20 விநாடிகளுக்கு இடம்பெறும்.

எச்சரிக்கை ஒலியைக் கேட்டவுடன் பொதுமக்கள் உள்ளூர் வானொலியையோ மீடியாகார்ப் ஒளிவழிகளையோ அணுகலாம். அல்லது குடிமைத் தற்காப்புப் படையின் இணையத்தளத்தையும் நாடலாம்.


  

Top