Images
  • sg covid (9)
    (படம்: Try Sutrisno Foo)

18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் 100 வெள்ளி மதிப்புள்ள பயணத்துறை பற்றுச்சீட்டுகள்

உள்ளூர் சுற்றுலாத் தலங்களில் செலவு செய்வதற்குச், சிங்கப்பூரர்களுக்கு 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

நோய்ப்பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட, உள்ளூர் சுற்றுலா துறைக்குப் புத்துயிரூட்டும் முயற்சிகளில் அதுவும் ஒன்று.

டிசம்பரிலிருந்து அடுத்த ஆண்டு ஜூன் வரை ஹோட்டல், சுற்றுலா தலங்கள், சுற்றுப்பயணங்கள் ஆகியவற்றுக்கு அந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம்.

  • சுற்றுலாத் தலங்களுக்கும் சுற்றுப்பயணங்களுக்கும் பிள்ளைகளுக்கான ஒவ்வொரு நுழைவுச்சீட்டுக்கும் 10 வெள்ளி மானியம் வழங்கப்படும்.
  • அதிகபட்சம் 6 பிள்ளைகளுக்கு மானிய விலையில் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்கள் தங்கள் SingPass விவரங்களைப் பதிந்து இணையம் வழியே பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அவ்வாறு செய்ய சிரமப்படுவோருக்கு உதவி வழங்கப்படுமென சிங்கப்பூர் பயணத்துறை கழகம் தெரிவித்தது.

பற்றுச்சீட்டுகள் குறித்து மேல் விவரம் நவம்பரில் அறிவிக்கப்படும்.

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக, மொத்தம் 320 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள பற்றுச்சீட்டுகள் விநியோகிக்கப்படவுள்ளன. 

Top