Images
  • seithi skyline 2
    படம்: நித்திஷ் செந்தூர்

சிங்கப்பூருக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை சாதனை அளவில் 18.5 மில்லியனாக உயர்வு

சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கையும், அவர்கள் இங்கு செலவு செய்யும் தொகையும் சென்ற வருடம் தொடர்ந்து 3ஆவது ஆண்டாக அதிகரித்தன.

சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் முன்னோடி மதிப்பீட்டில் அது தெரியவந்தது.

வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 6.2 விழுக்காடு அதிகரித்து 18.5 மில்லியனாகப் பதிவானது.

முன்னுரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அது கணிசமாக அதிகம்.

சீனா, இந்தியா, மலேசியா ஆகியவற்றில் இருந்து வந்த அதிகமான பயணிகளின் எண்ணிக்கை அதற்கு உதவியது.

சுற்றுப் பயணிகள் சென்ற ஆண்டு சிங்கப்பூரில் 27 பில்லியன் வெள்ளிக்கும் மேல் செலவு செய்துள்ளனர். முன்னைய ஆண்டை விட அது ஒரு விழுக்காடு அதிகம்.

இந்த ஆண்டு 19 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுப் பயணிகள் சிங்கப்பூருக்கு வருவர் என்று பயணக் கழகம் முன்னுரைத்துள்ளது. அவர்கள் சுமார் 28 பில்லியன் வெள்ளியை இங்கு செலவிடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Top