Images
  • museum of icecream
    படம்: Museum of Icecream 

சிங்கப்பூரில் 3 புதிய பயணக் கவர்ச்சித் தலங்கள்!

சிங்கப்பூரில் மூன்று புதிய பயணக் கவர்ச்சித் தலங்கள் இவ்வாண்டின் பிற்பாதியிலிருந்து திறக்கப்படும் என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற வருடாந்திரத் தொழில்துறை மாநாட்டில் அந்த அறிவிப்பு இடம்பெற்றது.

Museum of Ice Cream, Slingshot ஆகியவை இவ்வாண்டின் பிற்பாதியில் திறக்கப்படும்.

SkyHelix செந்தோசா அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது.

புதிய பயணக் கவர்ச்சித் தலங்களைத் தவிர்த்து,
Orchard ரோடு போன்ற தற்போதைய சுற்றுப்பயணத் தலங்களைப் புதுப்பிக்கும் பணியில் கழகம் ஈடுபடுவதாய் அதன் தலைமை நிர்வாகி கீத் டான் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் நில ஆணையம், நகரச் சீரமைப்பு ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து, சமர்செட் ஸ்கேட் பார்க்குக்கும் கில்லினி ரோட்டுக்கும் இடையில் உள்ள காலி நிலத்திற்கான குத்தகை வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

அங்கு ஒரு புதிய சுற்றுப்பயணத் தலத்தை அமைக்க, கழகம் திட்டமிடுகிறது.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் ஒளியூட்டு நிகழ்ச்சியைப் பெரிய அளவில் நடத்தவும் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன.

கிரேஞ்ச் ரோட்டில் அமைந்துள்ள திறந்தவெளிக் கார் நிறுத்துமிடத்தை, நிகழ்ச்சித் தளமாக உருமாற்றும் பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Top