Images
  • sg attraction
    (படம்: Resorts World Sentosa)

வெள்ளிக்கிழமை முதல், சுற்றுலாத் தலங்களில் கூடுதலான வருகையாளர்களை அனுமதிக்கலாம்

சுற்றுலாத் தலங்கள், வரும் வெள்ளிக்கிழமை முதல் கூடுதலான வருகையாளர்களை அனுமதிக்க முடியும்.

அதற்கு அவை வர்த்தக தொழில் அமைச்சிடம் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்.

சுற்றுலாத் தலங்களில் அனுமதிக்கப்படும் வருகையாளர்கள்....

தற்போது - 25 விழுக்காடு வரை மட்டுமே

இனி - 50 விழுக்காடு வரை

சுற்றுலாத் தலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தூய்மையை உறுதிசெய்யவும், முன்னர் குறைவான வருகையாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக சிங்கப்பூர் பயணத்துறை கழகம் தெரிவித்தது.

வெளிப்புற நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்படும் வருகையாளர்கள்....

தற்போது - 50 பேர் மட்டுமே

வரும் வெள்ளிக்கிழமை முதல் - 250 பேர் வரை

  • வருகையாளர்களைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் 50 பேருக்கு மேல் இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
  • குழுக்களுக்கு இடையே மூன்று மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு வெளிப்புற நிகழ்ச்சியிலும் அதிகபட்சம் 5 குழுக்கள் மட்டுமே இருக்க முடியும்.
  • வருகையாளர்களிடையே ஒரு மீட்டர் இடைவெளியை உறுதிசெய்ய, ஒவ்வொரு குழுவிற்கும் போதுமான அளவு இடம் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

வருகையாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுவதால், பாதுகாப்பான நிர்வாகத்தை உறுதிசெய்ய, சிங்கப்பூர் பயணத்துறை கழகம் தொடர்ந்து சோதனைகளை மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டது. 

Top