Images
  • town council

நகர மன்றங்களுக்கான புதிய நிர்வாக நடத்தை விதிமுறை அறிமுகம்

சிங்கப்பூரிலுள்ள நகர மன்றங்களுக்கான, புதிய நிர்வாக நடத்தை விதிமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அது நடப்புக்குவரும். வெளிப்படைத்தன்மை, நிர்வாகத் தரம்-இரண்டையும் அதிகரிப்பது அதன் நோக்கம்.

நேர்மை, பொறுப்புணர்வு உள்ளிட்ட 5 முக்கியக் கொள்கைகளின் அடிப்படையில் அந்த விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. நிதி நிர்வாகம், முகவர்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் உள்ள விதிமுறைகள், அந்த ஐந்து கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

நகர மன்றங்கள், இத்தகைய ஆகச் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற, தேசிய வளர்ச்சி அமைச்சு ஊக்குவிக்கிறது. அந்த நடைமுறைகளைப் பின்பற்றத் தவறும்போது, நகர மன்றங்கள் அதற்கு உரிய காரணத்தை விளக்கவேண்டியிருக்கும்.

நகர மன்றங்கள் அந்த விதிமுறைகள் பின்பற்றப்பட்டது குறித்து ஆண்டுதோறும், அமைச்சிடம் சோதனைப் பட்டியல் ஒன்றைத் தாக்கல் செய்யவேண்டும்.

2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அத்தகைய முதலாவது பட்டியலை நகர மன்றங்கள் ஒப்படைக்க வேண்டும். 

Top